பிற விளையாட்டு
20- வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள போட்டி: இந்தியாவின் ஹிமா தாஸ் தங்கம் வென்றார்

20- வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள போட்டியில் இந்தியாவின் ஹிமா தாஸ் தங்கம் வென்றார்
தாம்ப்ரே, 

பின்லாந்தின் தாம்ப்ரேவில், 20- வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகளப் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.. இதில் இந்தியா சார்பில் ஹிமா தாஸ் பங்கேற்றார். நேற்று 400 மீட்டர் ஒட்டப்பந்தயம் நடந்தது. இதில் ஹிமா தாஸ் வெற்றி இலக்கை 51.46 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார்.

18 வயதான அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமா தாஸ், கூறியது, தங்கம் வென்றதில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு ஊக்கம் அளித்த அனைவரும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். ஹிமாதாசுக்கு இந்தியாவில் பாராட்டுகள் குவிக்கின்றன.