பிற விளையாட்டு
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் ஒகுஹாரா

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் ஜப்பானின் ஒகுஹாரா இந்தியாவின் பி.வி.சிந்துவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். #ThailandOpenBadminton
பாங்காக்,

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர் கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் பி.வி.சிந்துவை 21-15, 21-18 என்ற செட் கணக்கில் நஜோமி ஒகுஹரா வீழ்த்தினார். இதன்மூலம் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தினை கைப்பற்றினார்.