மாநில பள்ளி கைப்பந்து தொடக்க ஆட்டத்தில் செயின்ட் பீட்ஸ் அணி வெற்றி

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், சான் அகாடமி ஆதரவுடன் 2–வது மாநில பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

Update: 2018-07-18 21:45 GMT

சென்னை, 

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், சான் அகாடமி ஆதரவுடன் 2–வது மாநில பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவில் வருமான வரி கூடுதல் கமி‌ஷனர் ஏ.சசிகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன் துரை தலைமை தாங்கினார். செயின்ட் ஜோசப்ஸ் கல்வி குழும நிர்வாக இயக்குனர் பி.பாபு மனோகரன், இயக்குனர் வி.சசிசேகர், சான் அகாடமி அறங்காவலர் அர்ச்சனா ஆனந்த், சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், பொருளாளர் ஏ.பழனியப்பன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். 21–ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 30 அணிகளும், பெண்கள் பிரிவில் 21 அணிகளும் பங்கேற்றுள்ளன.

நேற்று நடந்த ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் செயின்ட் பீட்ஸ் (சென்னை) அணி 25–14, 25–14 என்ற நேர்செட்டில் எஸ்.பி.ஓ.ஏ. அணியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் வேலம்மாள் (சென்னை) அணி 25–12, 25–9 என்ற நேர்செட்டில் அயனாவரம் மேல் நிலைப்பள்ளி (சென்னை) அணியை வீழ்த்தியது. இன்னொரு ஆட்டத்தில் எம்.சி.டி.எம். (சென்னை) அணி 25–12, 25–23 என்ற நேர்செட்டில் செயின்ட் ஜார்ஜ் அணியை சாய்த்தது. பெண்கள் பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் லேடி சிவசாமி (சென்னை) அணி 25–8, 25–7 என்ற நேர்செட்டில் மெட்ராஸ் சேவாசதன் (சென்னை) அணியை தோற்கடித்தது. மற்ற ஆட்டங்களில் மகரிஷி வித்யாலயா அணி 25–18, 25–6 என்ற நேர்செட்டில் பிரான்சிஸ் சேவியர் (சென்னை) அணியையும், சத்ரியா (விருதுநகர்) அணி 25–19, 25–27, 25–8 என்ற செட் கணக்கில் குண்டூர் சுப்பையா (சென்னை) அணியையும் வீழ்த்தின.

மேலும் செய்திகள்