பிற விளையாட்டு
பிரான்ஸ் தடகள போட்டி: ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்

சோடிவில்லி சர்வதேச தடகள போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்தது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் 20 வயதான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 85.17 மீட்டர் தூரம் வீசி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
புதுடெல்லி, சோடிவில்லி சர்வதேச தடகள போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்தது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் 20 வயதான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 85.17 மீட்டர் தூரம் வீசி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். மால்டோவா வீரர் ஆன்ட்ரியன் மார்டாரே 81.48 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கமும், லிதுவேனியா வீரர் எடிஸ் மாதுசேவியஸ் 79.32 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப்பதக்கமும் பெற்றனர். 2012–ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற டிரினிடாட் அண்ட் டொபாக்கோ வீரர் வால்காட் 78.26 மீட்டர் தூரம் வீசி 5–வது இடமே பிடித்தார்.