பிற விளையாட்டு
ஜூனியர் ஆசிய மல்யுத்தம்: இந்தியாவுக்கு 3 வெள்ளி, 1 வெண்கலம்

ஜூனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய அணி 3 வெள்ளி மற்றும் 1 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. #JuniorAsianWrestlingChampionship
புதுடெல்லி,

புதுடெல்லியில் ஜூனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நேற்று ப்ரீஸ்டைல் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றன.

இதில் 57 கிலோ பிரிவின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் நவீன், உஸ்பெக்கிஸ்தானின் குலோம்ஜான் அப்துல்லோவிடம் தோல்வியடைந்து வெள்ளிபதக்கம் வென்றார்.

மற்றொரு ஆட்டமான, 70 கிலோ பிரிவில் இந்தியாவின் விஷால் காளிராமன், ஈரானின் அமீர் ஹொசைனிடம் தோல்வியடைந்து வெள்ளிபதக்கத்தை கைப்பற்றினார். இதேபோல் இந்தியாவின் சச்சின் கிரி இறுதிச் சுற்றில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதில் 65 கிலோ எடைப் பிரிவில் துர்க்மேனிஸ்தானின் பெர்மன் ஹோம்மடோவை வீழ்த்தி இந்திய வீரர் கரண் வெண்கலம் வென்றார்.

இதன்மூலம் இந்த போட்டிகளில் இந்திய அணி, 3 வெள்ளி மற்றும் 1 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.