பிற விளையாட்டு
பிரிக்ஸ் கைப்பந்து: இந்திய பெண்கள் அணிக்கு வெள்ளிப்பதக்கம்

பிரிக்ஸ் கைப்பந்து போட்டியில் இந்திய பெண்கள் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.
சென்னை,

2-வது பிரிக்ஸ் இளையோர் (21 வயதுக்கு உட்பட்டோர்) விளையாட்டு போட்டி தென்ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க்கில் நடந்தது. இதில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்து அணி கலந்து கொண்டது. ஆண்கள் பிரிவில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்தது. ரஷியா, சீனா அணிகளிடம் தோல்வி கண்டது. இதன் மூலம் இந்திய ஆண்கள் அணி வெண்கலப்பதக்கம் பெற்றது. ரஷியா அணி தங்கப்பதக்கமும், சீனா அணி வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றியது. பெண்கள் பிரிவில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது, சீனாவிடம் வீழ்ந்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. சீனா அணி தங்கப்பதக்கமும், தென்ஆப்பிரிக்கா அணி வெண்கலப்பதக்கமும் வென்றன.