பிற விளையாட்டு
பிரபல மல்யுத்த வீரர் கேன் மேயர் தேர்தலில் வெற்றி

பிரபல (WWE) மல்யுத்த வீரர் கேன் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். #WWE #Kane
டென்னஸி,

அமெரிக்காவில்  (WWE) மல்யுத்த போட்டிகள் மிகவும் பிரபலமானது. இந்த மல்யுத்தப் போட்டியின் மூலம் பிரபலமானவர் கேன் என்று அழைக்கப்படும் கிளென் ஜேக்கப்ஸ் ஆவார். இவர் மல்யுத்தப் போட்டிகளின் மூலம் பிரபலமானதால் படங்கள் மற்றும் அரசியலில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவில் மூன்றாவது பெரிய மாகாணமான டென்னஸியில் உள்ள நாக்ஸ் கவுண்டியில் மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் கிளென் ஜேக்கப்ஸ், ஜனநாயகக் கட்சித் தலைவரான லிண்டா ஹானினை எதிர்த்து போட்டியிட்டார். இதில் ஜேக்கப் 66 சதவிகித வாக்குகளை பெற்று அபார வெற்றிபெற்றார்.

இதற்கு டபிள்யு.டபிள்யு.இ. தனது டுவிட்டர் பதிவில், டென்னஸியின் நாக்ஸ் கவுண்டி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு கேன்-க்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக பதிவிட்டுள்ளது.

Congratulations to @KaneWWE on being elected Mayor of Knox County, Tennessee! https://t.co/I4E5YQhYCC— WWE (@WWE) August 3, 2018