பிற விளையாட்டு
ஆசிய விளையாட்டு போட்டி: மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவுக்கு தங்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் கிடைத்துள்ளது. #AsianGames2018
ஜகார்த்தா, 

ஆசிய விளையாட்டுப்போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடரில் மகளிர் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் தங்கம் வென்றார். 

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றுள்ளார். தற்போது வரை இந்தியா, 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கல பதக்கத்துடன் பதக்க பட்டியலில் 7-வது இடத்தில்  உள்ளது.