பிற விளையாட்டு
மல்யுத்தத்தில் தங்கப்பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியாவுக்கு ரூ.3 கோடி பரிசு - அரியானா அரசு அறிவிப்பு

மல்யுத்தத்தில் தங்கப்பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியாவுக்கு ரூ.3 கோடி பரிசு வழங்க உள்ளதாக அரியானா அரசு அறிவித்துள்ளது.
சண்டிகார்,

18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்தவர் பஜ்ரங் பூனியா. தொடக்க நாளில் நடந்த மல்யுத்த போட்டியில் ஆண்களுக்கான 65 கிலோ உடல் எடைப்பிரிவில் அவர் தங்கம் வென்று அசத்தினார். தங்கப்பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியாவுக்கு ரூ.3 கோடி பரிசாக வழங்கப்படும் என்று அரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. 24 வயது ரெயில்வே ஊழியரான பஜ்ரங் பூனியா அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.