ஜப்பான் கூடைப்பந்து அணியின் 4 வீரர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் - பெண்களுடன் தங்கியதாக புகார்

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்ற ஜப்பான் கூடைப்பந்து அணியின் 4 வீரர்கள், பெண்களுடன் தங்கியதாக புகார் எழுந்ததால் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

Update: 2018-08-20 22:15 GMT
ஜகர்தா,

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்றுள்ள ஜப்பான் கூடைப்பந்து அணியில் இடம் பிடித்து இருந்த வீரர்கள் ஹசி மோட்டா, கெய்டா இமாமுரா, நகாயோஷி, தகுமோ சாட்டோ ஆகியோர் கத்தாருக்கு எதிரான லீக் ஆட்டம் முடிந்ததும், வீரர்கள் தங்கும் கிராமத்தில் இருந்து வெளியேறி ஜகர்தாவில் உள்ள உணவு விடுதியில் உள்ள பாருக்கு சென்று மது அருந்தி உள்ளனர். அத்துடன் அவர்கள் 4 பெண்களை அழைத்து கொண்டு அங்குள்ள ஓட்டலில் ஒரு இரவு தங்கி உல்லாசம் அனுபவித்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து அறிந்த ஜப்பான் ஒலிம்பிக் சங்கம் ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்ட 4 வீரர்களையும் உடனடியாக நாடு திரும்ப உத்தரவிட்டது. பின்னர் விசாரணை நடத்தி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்