பிற விளையாட்டு
ஆசிய விளையாட்டுப்போட்டி: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

ஆசிய விளையாட்டுப்போட்டியில் குண்டு எறிதல் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.
ஜகார்தா,

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் குண்டு எறிதல் ஆடவர் பிரிவு போட்டி நடைபெற்றது. இதில்,  இந்தியாவின் தஜிந்தர் பால் சிங் தூர் தங்கபதக்கம் வென்று அசத்தினார். 

ஆசிய போட்டி தொடரில் இந்தியா வாங்கும் 7-வது தங்கம் இதுவாகும். 7-தங்கம் 5 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது.