பிற விளையாட்டு
ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய கராத்தே அணியில் 2 வீரர்கள்

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய கராத்தே அணியில் 2 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
சென்னை,

இந்தோனேஷியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டில் கராத்தே போட்டி நேற்று தொடங்கியது. இதில் இந்தியா சார்பில் சரத் (75 கிலோ), விஷால் (84 கிலோ) ஆகிய வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஆசிய ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு அழைப்பின் பேரில் இந்திய கராத்தே சங்க தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன் இந்த போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.