பிற விளையாட்டு
4-வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு

4-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
சவுதம்டன், 

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 4–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று தொடங்கியது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு டெஸ்டுகளில் இங்கிலாந்தும், நாட்டிங்காமில் நடந்த 3–வது டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் இங்கிலாந்து 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4–வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் உள்ள ரோஸ் பவ்ல் ஸ்டேடியத்தில் இன்று  தொடங்கியது. ஒரு வார கால ஓய்வுக்கு பிறகு இரு அணி வீரர்களும் புத்துணர்ச்சியுடன் களம் இறங்கி உள்ளனர்.

இந்த மைதானத்தில் இதுவரை 2 டெஸ்ட் மட்டுமே நடந்துள்ளன. 2011–ம் ஆண்டில் இலங்கையுடன் டிரா செய்த இங்கிலாந்து அணி 2014–ம் ஆண்டில் இந்தியாவை தோற்கடித்து இருந்தது. இந்த ஆடுகளத்தில் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சு எடுபடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

உத்தேச அணி வீரர்கள் விவரம் ;-

இங்கிலாந்து: அலஸ்டயர் குக், ஜென்னிங்ஸ், ஜோ ரூட் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, சாம் குர்ரன், அடில் ரஷித், ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சன்.

இந்தியா: தவான், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ஹர்திக் பாண்ட்யா, ரிஷாப் பான்ட், அஸ்வின், முகமது ‌ஷமி, இஷாந்த் ‌ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா.