பிற விளையாட்டு
வெள்ளி வென்ற ஆரோக்ய ராஜீவ், தருணுக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை தமிழக முதல்–அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தை சேர்ந்த ஆரோக்ய ராஜீவ், தருண் ஆகியோருக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.
சென்னை, இந்தோனேஷியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த ஆரோக்ய ராஜீவ், தருண் ஆகியோருக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். அத்துடன் வீரர்கள் இருவருக்கும் தனித்தனியாக அவர் வாழ்த்து கடிதமும் அனுப்பி இருக்கிறார்.