பிற விளையாட்டு
ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற சரத் கமல், வருண் தக்கர், கணபதிக்கு தலா ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை

தமிழக வீரர்கள் வருண் தக்கர், கணபதி ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.
சென்னை, இந்தோனேஷியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற தமிழக வீரர் சரத் கமல், பாய்மரப்படகு போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்ற தமிழக வீரர்கள் வருண் தக்கர், கணபதி ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். அத்துடன் பதக்கம் வென்ற 3 வீரர்களுக்கும் முதல்–அமைச்சர் வாழ்த்து கடிதம் அனுப்பி இருக்கிறார்.