பிற விளையாட்டு
மாநில ஹேண்ட்பால் போட்டி தொடக்க ஆட்டத்தில் சேலம் அணி வெற்றி

17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான முதலாவது மாநில ஹேண்ட்பால் போட்டி சென்னை ஆவடியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது.
சென்னை, 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான முதலாவது மாநில ஹேண்ட்பால் போட்டி சென்னை ஆவடியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க ஆட்டத்தில் சேலம் அணி 23–16 என்ற கோல் கணக்கில் திருச்சி அணியை தோற்கடித்தது. மற்ற ஆட்டங்களில் வேலூர், நீலகிரி, திண்டுக்கல், கோவை, காஞ்சீபுரம், மதுரை, விழுப்புரம் மாவட்ட அணிகள் வெற்றி பெற்றன. இன்று இறுதி நாள் ஆட்டம் நடக்கிறது.