பிற விளையாட்டு
மாநில நீச்சல் போட்டி: சென்னை கிளப் சாம்பியன்

72–வது மாநில சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் வளாகத்தில் மூன்று நாட்கள் நடந்தது.
சென்னை, 72–வது மாநில சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் வளாகத்தில் மூன்று நாட்கள் நடந்தது. கடைசி நாளில் நடந்த 400 மீட்டர் பிரிஸ்டைல் பிரிவில் நெல்லை வீரர் எமில் ராபின் சிங்கும், 200 மீட்டர் பேக் ஸ்டிரோக் பிரிவில் நெல்லை வீரர் சேது மாணிக்கவேலும், பெண்களுக்கான 100 மீட்டர் பிரிஸ்டைல், 50 மீட்டர் பட்டர்பிளை பிரிவுகளில் சென்னை டர்டில்ஸ் கிளப்பை சேர்ந்த ஜெயவீனாவும், 400 மீட்டர் பிரிஸ்டைல் பந்தயத்தில் கோவை வீராங்கனை பாவிகா துகாரும் தங்கப்பதக்கத்தை வென்றனர்.போட்டிகளின் முடிவில் தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆண்கள் பிரிவில் நெல்லை வீரர் எமில் ராபின் சிங்கும், பெண்கள் பிரிவில் ஜெயவீனாவும் பெற்றனர். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை 283 புள்ளிகளுடன் சென்னை டர்டில்ஸ் கிளப் கைப்பற்றியது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை மாநில நீச்சல் சங்க தலைவர் சடையவேல் கைலாசம் வழங்கினார். பரிசளிப்பு விழாவில் செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் முரளிதரன், துணைத்தலைவர்கள் முனியாண்டி, முகுந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.