து ளி க ள்

வருகிற 15–ந்தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 17 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

Update: 2018-09-02 20:30 GMT

*வருகிற 15–ந்தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 17 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அஸ்கார் ஆப்கன் தலைமையிலான அந்த அணியில் ரஷித்கான், முகமது நபி, முஜீப் ரகுமான், ‌ஷராபுத்தீன் அஷ்ரப் ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.

*இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 14–வது சுற்றான இத்தாலி கிராண்ட்பிரி அங்குள்ள மோன்ஸா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. இதில் 306.720 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி காரில் சீறிப்பாய்ந்த 20 வீரர்களில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் முதலாவதாக வந்தார். இந்த சீசனில் அவரது 6–வது வெற்றி இதுவாகும். 14 சுற்று முடிவில் ஹாமில்டன் 256 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் 226 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும் உள்ளனர். அடுத்த சுற்று போட்டி சிங்கப்பூரில் வருகிற 16–ந்தேதி நடக்கிறது.

*ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் ஆல்–ரவுண்டர் 35 வயதான சீன் எர்வின் கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

மேலும் செய்திகள்