பிற விளையாட்டு
சர்வதேச துப்பாக்கிச்சூடு சாம்பியன்ஷிப் போட்டி : இந்தியாவின் ஹரிடே ஹசரிகா தங்க பதக்கம் வென்றார்

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஹரிடே ஹசரிகா தங்க பதக்கம் வென்றார்.
சாங்வான்,

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடந்து வருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஜூனியர் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், 16 வயதான ஹரிடே ஹசரிகா தங்க பதக்கம் வென்று அசத்தினார். 

ஏற்கனவே, நேற்று  நடந்த ஜூனியர் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பந்தயத்தின் இறுதி சுற்றில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 245.5 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கம் வென்றது  நினைவிருக்கலாம்.