பிற விளையாட்டு
மாநில பள்ளி கைப்பந்து போட்டி நெல்லையில் நடக்கிறது

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கோப்பைக்கான 68–வது மாநில ஆண்கள் பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 29–ந் தேதி முதல் அக்டோபர் 2–ந் தேதி வரை நடக்கிறது.
சென்னை, நெல்லை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் தமிழ்நாடு மாநில கைப்பந்து சங்கம் அனுமதியுடன் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கோப்பைக்கான 68–வது மாநில ஆண்கள் பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் மற்றும் 23–வது மாநில பெண்கள் பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள தங்கப்பழம் வேளாண் கல்லூரி மைதானத்தில் வருகிற 29–ந் தேதி முதல் அக்டோபர் 2–ந் தேதி வரை நடக்கிறது. இதில் பள்ளி அணிகள் கலந்து கொள்ளலாம். இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் தங்களது பெயரை வருகிற 18–ந் தேதிக்குள், பொதுச்செயலாளர், தமிழ்நாடு மாநில கைப்பந்து சங்கம், 101/46 கெங்கு ரெட்டி ரோடு, எழும்பூர், சென்னை–8 என்ற முகவரியில் பதிவு செய்யலாம் என்று தமிழ்நாடு மாநில கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் தெரிவித்துள்ளார்.