டென்னிஸ்
உலக டேபிள் டென்னிஸ்: இந்திய அணி தோல்வி

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி ஆஸ்திரியாவிடம் தோல்வியை தழுவியது.
ஹாம்ஸ்டட்,

சுவீடனில் அணிகளுக்கு இடையேயான உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஆண்கள் அணி டி பிரிவில் இடம்பெற்றுள்ளது. முதல் இரு போட்டிகளில் சரத் கமல், சத்யன் ஆகியோர் தோல்வியை தழுவினர். 3-வது போட்டியில் ஹர்மீத் தேசாய் வெற்றி பெற்றார்.

மாற்று ஒற்றையரில் சரத்கம், சத்யன் வெற்றி பெற, இந்தியா 3-2 என வெற்றி பெற்றது.

இந்தநிலையில் கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரிய வீரர் பெக்ரலை எதிர்கொண்ட இந்தியரர் சத்யன் 13-11, 9-11, 11-7, 11-9 என்ற செட்களில் தோல்வியைத் தழுவினார். இதனால் ‘ரவுண்டு–16’ சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை இந்திய அணி பறிகொடுத்தது. இதன் மூலம் டி பிரிவில் 7-வது இடத்துடன் வெளியேறுகிறது. 

பெண்களுக்கான போட்டியில் ஏ பிரிவில் உள்ள இந்திய அணி 5 லீக் போட்டிகளிலும் தோற்றுவிட்டது.