டென்னிஸ்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் ஷரபோவா வெற்றி

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி, ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது.
மாட்ரிட்,

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ரஷியாவின் ஷரபோவா 7-5, 6-1 என்ற நேர்செட்டில் ருமேனியாவின் கேமெலியா பெகுவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா 6-3, 7-5 என்ற நேர்செட்டில் குரோஷியாவின் பெட்ரா மார்டிச்சை வீழ்த்தினார். இன்னொரு ஆட்டத்தில் டென்மார்க் வீராங்கனை வோஸ்னியாக்கி 6-2, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லிக் பார்டியை வீழ்த்தினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ் வீரர் ரிச்சர்ட் காஸ்குய்ட் 6-4, 6-2 என்ற நேர்செட்டில் செக்குடியரசு வீரர் தாமஸ் பெர்டிச்சை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் செர்பியா வீரர் ஜோகோவிச் 7-5, 6-4 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீரர் நிஷிகோரியை சாய்த்தார்.