டென்னிஸ்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: சிமோனா ஹாலெப் 3–வது சுற்றுக்கு தகுதி

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது.
மாட்ரிட், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6–0, 6–3 என்ற நேர்செட்டில் பெல்ஜியம் வீராங்கனை எலிசே மெர்டென்ஸ்சை தோற்கடித்து 3–வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 10–வது இடத்தில் உள்ள செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா 6–3, 7–6 (10–8) என்ற நேர்செட்டில் மோனிகா புய்க்கை (புயர்டோரிகோ) தோற்கடித்து 3–வது சுற்றுக்குள் நுழைந்தார்.