டென்னிஸ்
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.
சிட்னி, ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் மனு அட்ரி– சுமீத் ரெட்டி ஜோடி 17–21, 15–21 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேஷியாவின் பெர்ரி ஆங்ரியவான்– ஹர்டியன்டோ இணையிடம் தோற்று வெளியேறியது. இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.