டென்னிஸ்
நடால் மீண்டும் ‘நம்பர் ஒன்’

நடால் மீண்டும் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தார்.
ரோம்,

ரோம் நகரில் நடந்த இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் 6-1, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி 8-வது முறையாக கோப்பையை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.