டென்னிஸ்
இத்தாலி ஓபன் டென்னிஸ்: உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா சாம்பியன்

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா சாம்பியன் பட்டம் வென்றார்.
ரோம்,

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை சிமோனா ஹாலெப்பும் (ருமேனியா), 4-ம் நிலை வீராங்கனை எலினா ஸ்விடோலினாவும் (உக்ரைன்) மோதினர். இதில் நடப்பு சாம்பியனான ஸ்விடோலினா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட்டில் எதிராளிக்கு எந்த ஒரு கேமையும் விட்டுக்கொடுக்காமல் 19 நிமிடங்களில் தனதாக்கிய ஸ்விடோலினா 2-வது செட்டில் மட்டும் சற்று சவாலை சந்தித்தார். முடிவில் ஸ்விடோலினா 6-0,6-4 என்ற நேர் செட் கணக்கில் ஹாலெப்பை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.