டென்னிஸ்
பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: குணேஸ்வரன் வெற்றி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 27-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்குகிறது.
பாரீஸ், 

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 27-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்குகிறது. இதற்கான தகுதி சுற்று போட்டி தற்போது நடந்து வருகிறது. இதன் 2-வது ரவுண்டில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் சல்வடோர் வீரர் மார்செலோ அரிவலோவை வீழ்த்தினார். குணேஸ்வரன், தகுதி சுற்றின் கடைசி ரவுண்டில் இலியாஸ் மெரை (சுவீடன்) இன்று சந்திக்கிறார். இதில் குணேஸ்ரன் வெற்றி பெற்றால் பிரதான சுற்றை எட்டுவார்.