டென்னிஸ்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; மகளிர் ஒற்றையர் காலிறுதியில் மரியா ஷரபோவா தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி தொடரின் மகளிர் ஒற்றையர் காலிறுதி போட்டியில் மரியா ஷரபோவா தோல்வி அடைந்துள்ளார்.
பாரீஸ்,

பாரீஸ் நகரில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில்,  ஸ்பெயினின் கார்பின் முகுருசா, ரஷ்யாவின் மரியா ஷரபோவாவும் மோதினர்.  இதில், துவக்கத்தில்  இருந்தே  ஆதிக்கம் செலுத்திய முகுருசா 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஷரபோவாவை வீழ்த்தினார். இதன்மூலம், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் முகுருசா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

அதேவேளையில், தோல்வி அடைந்த ஷரபோவா போட்டியில் இருந்து வெளியேறினார். தடை செய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்தியதால், விளையாட  தடை விதிக்கப்பட்டதால், ஷரபோவா, கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் விளையாடவில்லை. இந்த நிலையில், நடப்பு  பிரெஞ்சு ஓபன் டென்னிசில் விளையாட வந்த ஷரபோவா காலிறுதியில் வெளியேறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.