டென்னிஸ்
ஸ்டட்கர்ட் டென்னிஸ்: ரோஜர் பெடரர் ‘சாம்பியன்’

ஸ்டட்கர்ட் டென்னிஸ் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஸ்டட்கர்ட்,

ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் மெர்சிடஸ் கோப்பைக்கான சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-4, 7-6 (3) என்ற நேர் செட் கணக்கில் மிலோஸ் ராவ்னிக்கை (கனடா) தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 36 வயதான பெடரரின் 98-வது சர்வதேச பட்டம் இதுவாகும். இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் மீண்டும் முதலிடத்தை பிடித்த பெடரர், அடுத்து வரும் ஹாலே ஓபன் போட்டியில் பட்டம் வென்றால் தான் ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.