அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்று ஆட்டத்தில் சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. முதல் சுற்று ஆட்டத்தில் சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார்.

Update: 2018-08-27 22:30 GMT
நியூயார்க்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. செப்டம்பர் 9-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் முன்னணி வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா), எஸ்தோனியா வீராங்கனை கைய் கனேபியை சந்தித்தார். மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிமோனா ஹாலெப் 2-6, 4-6 என்ற நேர்செட்டில் கனேபியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான சிமோனா ஹாலெப் கடந்த ஆண்டும் அமெரிக்க ஓபன் போட்டியில் முதல் சுற்றுடன் நடையை கட்டி இருந்தார்.

மற்ற ஆட்டங்களில் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), வெரா லாப்கோ (பெலாரஸ்), கமேலி பெகு (ருமேனியா) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டங்களில் ஜாக் சோக் (அமெரிக்கா), கரென் காச்சனோவ் (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மேலும் செய்திகள்