டேபிள் டென்னிசில் இந்தியாவுக்கு முதல்முறையாக பதக்கம்

ஆசிய விளையாட்டின் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் அணிகள் பிரிவு அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி 0–3 என்ற கணக்கில் வலுவான தென்கொரியாவிடம் தோல்வி கண்டது.

Update: 2018-08-28 21:00 GMT

ஜகர்தா, 

ஆசிய விளையாட்டின் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் அணிகள் பிரிவு அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி 0–3 என்ற கணக்கில் வலுவான தென்கொரியாவிடம் தோல்வி கண்டது. இதன் மூலம் இந்திய அணி வெண்கலப்பதக்கம் பெற்றது. இந்திய அணி வீரர்கள் சத்யன், சரத்கமல், அமல்ராஜ் ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் தோல்வி கண்டனர். ஆசிய விளையாட்டு போட்டியின் டேபிள் டென்னிசில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும். வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த 3 வீரர்களும் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

ஸ்குவாஷ் போட்டியில் நேற்று நடந்த பெண்கள் அணிகள் பிரிவு லீக் ஆட்டங்களில் இந்திய அணி 3–0 என்ற கணக்கில் தாய்லாந்தையும், 3–0 என்ற கணக்கில் இந்தோனேஷியாவையும் தோற்கடித்தது. இதன் ஆண்கள் அணிகள் பிரிவில் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 3–0 என்ற கணக்கில் கத்தாரை வீழ்த்தியது.

மேலும் செய்திகள்