டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2018 : 4-ஆம் சுற்றில் மரியா ஷரபோவா அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் 4-ஆம் சுற்றில் மரியா ஷரபோவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
நியூயார்க்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் 8-வது நாளான இன்று 4-ஆம் சுற்றில், ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும் ரஷ்யாவைச்சேர்ந்தவருமான மரியா ஷரபோவா, ஸ்பெயினின் கர்லா சுவரேச் நவர்ரோவை எதிர்கொண்டார். 

இந்த போட்டியில், துவக்கத்திலேயே ஷரபோவா தடுமாறினார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய நவர்ரோ, 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் மரியா ஷரபோவாவை வீழ்த்தினார். இந்த தோல்வியின் மூலம்,  அமெரிக்க ஓபன் டென்னிசின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இருந்து மரியா ஷரபோவா வெளியேற்றப்பட்டுள்ளார்.