இஸ்ரேலிய டிரோனை சுட்டுவீழ்த்திவிட்டோம் -... ... 24வது நாளாக தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 9 ஆயிரத்து 500-ஐ கடந்தது
இஸ்ரேலிய டிரோனை சுட்டுவீழ்த்திவிட்டோம் - ஹிஸ்புல்லா
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில் லெபனானில் இருந்தும் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், லெபனான் தெற்கு எல்லைப்பகுதியில் பறந்த இஸ்ரேலிய டிரோனை சுட்டுவீழ்த்திவிட்டதாக ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.
Update: 2023-10-30 07:26 GMT