கர்நாடகா: முதல்-மந்திரி சித்தராமையா பங்கேற்ற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-10-2025
கர்நாடகா: முதல்-மந்திரி சித்தராமையா பங்கேற்ற நிகழ்ச்சியில் 13 பேர் மயக்கம்
புட்டூர் எம்.எல்.ஏ. அசோக் குமார் ராய் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது.
இதனால், அவரை காண திரளான மக்கள் கூடினர். இந்நிகழ்ச்சி மதியம் 12 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் மதியம் 1 மணி அளவில் நிகழ்ச்சி நடந்த மேடைக்கு வந்துள்ளார். பிற்பகல் 3 மணிக்கு நிகழ்ச்சி நிறைவடைந்தது. இதில், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது, சேலைகள் மற்றும் உணவு வழங்கப்பட்டன.
Update: 2025-10-20 14:43 GMT