கச்சத்தீவை மீட்க கோரும் தீர்மானம் சட்டசபையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 02-04-2025

கச்சத்தீவை மீட்க கோரும் தீர்மானம் சட்டசபையில் இன்று கொண்டு வரப்படுகிறது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை முன்மொழிகிறார்.

இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளும் பிரதமர், அந்நாட்டு அரசுடன் பேசி, அங்கு சிறையில் வாடும் தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க செய்து, மீட்டுக்கொண்டு வரவேண்டும் என்று அந்த தீர்மானத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துகிறார்.

இந்த தீர்மானத்தில் சட்டமன்ற கட்சியினர் விவாதித்த பிறகு, குரல் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும்.

Update: 2025-04-02 04:44 GMT

Linked news