3 நாடுகளுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...18-05-2025
3 நாடுகளுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம்
நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஜெர்மனி ஆகிய 3 நாடுகளுக்கு மத்திய வெளிவிவகார துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த பயணத்தில், அந்நாடுகளின் தலைவர்களை அவர் சந்தித்து பேசுகிறார். அதில், இருதரப்பு உறவுகள் பற்றி முழு அளவில் ஆலோசனை மேற்கொள்கிறார். இதுதவிர, உலகளாவிய மற்றும் மண்டல அளவிலான விவகாரங்களில் பரஸ்பர நலன்களை பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
Update: 2025-05-18 10:59 GMT