ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...18-05-2025
ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 5 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்தது. ஷசாங்க் சிங் 59 ரன்களுடனும், ஓமர்சாய் 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் தரப்பில் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முழுமையாக விளையாடி 7 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் பஞ்சாப் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஹர்ப்ரீத் பிரார் 3 விக்கெட்டுகளும், மார்கோ ஜான்சன் மற்றும் ஓமர்சாய் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.