இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் படப்பிடிப்பில் இணைந்த சமந்தா

கடைசியாக சமந்தா 'சிட்டாடல் ஹனி பனி' என்ற வெப் தொடரில் நடித்திருந்தார்.;

Update:2025-01-25 12:23 IST

மும்பை,

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

கடைசியாக இவர் ஹாலிவுட் வெப் தொடரான சிட்டாடல் தொடரின் இந்தி பதிப்பான 'சிட்டாடல் ஹனி பனி'யில் நடித்திருந்தார். இதில் நடிகர் வருண் தவான் கதாநாயகனாக நடிக்க சிக்கந்தர் கெர், எம்மா கேனிங், கே கே மேனன் மற்றும் சாகிப் சலீம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இயக்குனர் ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ள இந்த தொடர் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. தற்போது சமந்தா இதே இயக்குனர்களுடன் 'ரக்ட் பிரம்மாண்ட்' என்ற வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து சிறிது இடைவேளை எடுத்து கொண்ட சமந்தா தற்போது மீண்டும் படப்பிடிப்பில் இணைந்திருக்கிறார்

Tags:    

மேலும் செய்திகள்