"இன்னும் 100 நாட்களே".. 'டாக்ஸிக்' படக்குழு வெளியிட்ட போஸ்டர் வைரல்

கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக உள்ளது.;

Update:2025-12-09 13:25 IST

மும்பை,

நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இந்த படம் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது. அதை தொடர்ந்து யாஷ் தனது 19-வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘டாக்ஸிக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை பிரபல நடிகை கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.

இதில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா உட்பட பலர் நடிக்கின்றனர். கேவிஎன் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ரிலீஸ் திட்டமிடப்பட்டு, பலமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இறுதியாக இப்படம் அடுத்தாண்டு மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமாக உருவாக வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்பை, பெங்களூரு போன்ற பகுதிகளில் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரோடக்சன்ஸ் டாக்ஸிக் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் டாக்ஸிக் படம் வெளியாக இன்னும் 100 நாட்களே இருப்பதாக தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்