காந்தாரா - சாப்டர் 1 படத்திற்கு பிரபாஸ் கொடுத்த ரிவ்யூ

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த படத்தில் ருக்மிணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.;

Update:2025-10-04 08:09 IST

சென்னை,

கன்னட திரைப்படமான 'காந்தாரா சாப்டர் 1' படம் நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 2-ம் தேதி வெளியானது.

முன்னதாக இந்த படத்தின் தெலுங்கு டிரெய்லரை வெளியிட்ட பான்-இந்திய நட்சத்திரம் பிரபாஸ், இப்போது இந்த அதிரடி படம் குறித்த தனது ரிவ்யூவை பகிர்ந்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "காந்தாரா சாப்டர் 1 அற்புதமான படம். அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர். ரிஷப் ஷெட்டி, விஜய் கிரகந்தூர் மற்றும் ஹோம்பலே பிலிம்ஸுக்கு வாழ்த்துக்கள்" என்று கூறி இருக்கிறார்.

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த படத்தில் ருக்மிணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது. பழங்குடிகள் - மன்னர் வாரிசுகளுக்கு இடையேயான கதையில் கடவுள், தொன்மம் உள்ளிட்ட விஷயங்களைப் பதிவு செய்துள்ளார் ரிஷப் ஷெட்டி. பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.



Tags:    

மேலும் செய்திகள்