'விடாமுயற்சி' - கெரியரிலேயே அதிக சம்பளம் வாங்கினாரா அஜித்?

’விடாமுயற்சி’படம் வரும் 6ந் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-02-03 11:44 IST

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. 

விடாமுயற்சி திரைப்படம் பிரேக்டவுன் என்கிற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கே ரிலீஸ் ஆக இருந்த இப்படம் சில காரணங்களால் வரும் 6ந் தேதிக்கு தள்ளிப்போனது. படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் விடாமுயற்சி படத்திற்கான புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு அஜித் ரூ. 105 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது அவர் கெரியரிலேயே அதிக சம்பளமாகும். தொடர்ந்து, அடுத்த படத்திற்கு ரூ. 200 கோடி சம்பளம் கேட்பதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்