'விர்ஜின் பாய்ஸ்' பட பர்ஸ்ட் லுக் - வைரல்
இப்படத்தில் கீதானந்த் மற்றும் மித்ரா சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.;
சென்னை,
தயானந்த் இயக்கத்தில் காதல் - காமெடி கதைக்களத்தில் உருவாகி இருக்கும் படம் 'விர்ஜின் பாய்ஸ்'. இப்படத்தை ராஜ்குரு பிலிம்ஸ் நிறுவனத்தில் கீழ் ராஜா தரபுனேனி தயாரிக்கிறார்.
கீதானந்த் மற்றும் மித்ரா சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் கோடையில் வெளியாக உள்ளநிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த போஸ்டரில் ' சகோதரரே, நீங்கள் விர்ஜினா? என்ற வாசம் இடம்பெற்றிருக்கிறது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.