சினிமா துளிகள்
வாரிசு நடிகை தயங்குகிறார்!

பரபரப்புக்கு பெயர் போன மூன்றெழுத்து நாயகன் புதிதாக நடிக்கும் படத்துக்கு கதாநாயகி வேட்டை மும்முரமாக நடக்கிறது.
தனக்கு ஜோடியாக ‘வாரிசு’ நடிகையை ஒப்பந்தம் செய்யும்படி கூறுகிறாராம், பரபரப்பு நாயகன்.

அதைத்தொடர்ந்து ‘வாரிசு’ நடிகையுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. பரபரப்பு நாயகனுடன் ஜோடி சேர ‘வாரிசு’ நடிகை தயங்குகிறாராம். அவருடைய தயக்கத்தை போக்கி, படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்!