கச்சத்தீவு மீட்பு குறித்து நடவடிக்கை இல்லை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- இலங்கை சிறையில் வாடும் மீனவர்கள் விடுதலை குறித்து பிரதமரிடம் கோரிக்கை விடுத்தோம். பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தின்போது கச்சத்தீவை மீட்பது குறித்து நடவடிக்கை இல்லாதது வேதனை அளிக்கிறது. மீனவர்கள் விடுதலை, படகுகள் விடுவிப்பு குறித்து எந்தவித நடவடிக்கையும் இல்லை என்றார்.