உத்தரபிரதேசம்: 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்

கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.;

Update:2025-12-07 12:39 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் கடந்த சில நாட்களுக்குமுன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மேலும், பாலியல் வன்கொடுமை சம்பவத்தை வீடியோவாக எடுத்து ஆன்லைனில் விட்டுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளனர். அதேபோல், வீடியோவை ஆன்லைனில் வெளியிடமல் இருக்க ரூ. 5 லட்சம் தரும்படி சிறுமியின் குடும்பத்தினரை மிரட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வைபவ் (வயது 19), விஷால் (வயது 21) ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்