சத்தீஸ்காரில் கார்-லாரி மோதி விபத்து - 5 பேர் பலி
இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.;
ராய்ப்பூர்,
சத்தீஸ்கார் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தில் ஒரு கண்காட்சிக்கு நேற்று முன்தினம் சென்று விட்டு நேற்று அதிகாலையில் காரில் சிலர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். பத்ரடோலி என்ற கிராமத்துக்கு அருகில் கார் வந்த போது எதிரே வந்த லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரில் வந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.