டெல்லியில் தொடர்ந்து மோசமான நிலையில் காற்றின் தரம்

காற்று மாசுபாட்டால் முதியோர், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.;

Update:2025-12-07 11:54 IST

டெல்லி,

தலைநகர் டெல்லியில் பல ஆண்டுகளாக காற்றின் தரம் மோசமாக நிலவி வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் நீடித்து வருகிறது.

டெல்லியில் குளிர்காலத்தில் நிலவி வரும் நிலையில் இந்த சூழ்நிலையிலும் காற்றின் தரம் மோசமாக நீடித்து வருகிறது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில், டெல்லியில் காற்றின் தரக்குறியீடு இன்று 305 (மிக மோசம்) என்ற நிலையில் உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 279 தரக்குறியீட்டில் இருந்த காற்றின் தரம் இந்த வாரம் 305 ஆக மோசமடைந்துள்ளது. இதனால், முதியோர், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்