படைவீரர் கொடி நாள் நிதிக்கு பங்களிப்போம்; பிரதமர் மோடி அழைப்பு
படைவீரர் கொடி நாள் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.;
டெல்லி,
இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ஆம் தேதி படைவீரர் கொடி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. .
இந்நாளில் முப்படை வீரர்களின் வீரம், தியாகத்தை போற்றி அவர்களது குடும்பத்தினருக்கு உதவிடும் வகையில் படைவீரர் கொடி நாள் நிதி சேகரிக்கப்படுகிறது. அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் போரில் வீரமரணமடைந்த, காயமடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு நன்கொடை நிதி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், படைவீரர் கொடி நாள் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி முப்படை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் பிரதமர் மோடி நிதி அளித்தார். மேலும், படைவீரர் கொடி நாள் நிதிக்கு மக்கள் அதிக அளவில் பங்களிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.