பாக்கெட்டில் மது விற்பது ஆபத்தானது - சுப்ரீம் கோர்ட்டு காட்டம்
பாக்கெட்டுகளில் மது விற்பது ஆபத்தானது என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
2 மதுபான நிறுவனங்களின் டிரேட்மார்க் சர்ச்சையில் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சூர்ய காந்த், ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 2 நிறுவனங்களின் பாக்கெட் மது வகைகளை வக்கீல்கள் கோர்ட்டுக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதைப்பார்த்த நீதிபதிகள் கடும் ஆத்திரம் அடைந்தனர். ‘இது என்ன? ஜூசா?’ என கேட்டனர். மேலும் ‘பாக்கெட் மது விற்பனைக்கு அனுமதிக்கலாமா?’ என்றும் கேள்வி எழுப்பினர். இவ்வாறு பாக்கெட்டுகளில் மது விற்பது ஆபத்தானது எனக்கூறிய நீதிபதிகள், இது ஏமாற்றும் செயல் எனவும் கூறினர்.
பின்னர் முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி நாகேஸ்வரராவை இரு மதுபான நிறுவனங்களுக்கு இடையேயான மத்தியஸ்தராக நியமித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.