சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுவையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2023-10-05 23:13 IST

புதுச்சேரி

புதிய போக்குவரத்து விதிகளின்படி வாகன ஓட்டிகளுக்கு நியாயமற்ற அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும், புரோக்கர்களுக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், போக்குவரத்து துறையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரியவரிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை ஆட்டோ டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் (சி.ஐ.டி.யு.) வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளுக்காக 100 அடி ரோட்டில் உள்ள போக்குவரத்து துறை அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆட்டோ சங்க தலைவர் மணவாளன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் சீனுவாசன் கண்டன உரையாற்றினார். தனியார் போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் மதிவாணன், ஆட்டோ சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார், சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் கொளஞ்சியப்பன், மணிபாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்